"3+ வயதுள்ளவர்களுக்கு 6 மாதத்தில் கொரோனா தடுப்பூசி" - சீரம் இன்ஸ்டிட்யூட்

3 years ago 950

Puthiyathalaimurai-logo

ஹெல்த்

14,Dec 2021 08:00 PM

Corona-vaccine-at-6-months-for-3--year-olds-Serum-Institute

3 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி இன்னும் 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என சீரம் இன்ஸ்டிட்யூட் தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் தொற்று தொடர்பாக சிஐஐ எனப்படும் இந்திய தொழிற் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய அதார் பூனாவாலா, கொரோனாவிற்கு எதிராக மிகப்பெரிய அளவில் எதிர்ப்பாற்றலை பெருக்கிக்கொள்ள பூஸ்டர் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தார். புதிதாக வந்துள்ள ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசியை தங்கள் நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

image

உலகளவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தேவை இருக்கும் அளவுக்கு உற்பத்தி இல்லை என்றும் அதார் பூனாவாலா தெரிவித்தார். அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்து வருகிறது

இதனைப்படிக்க...சத்தீஸ்கர்: 12அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த மணமக்கள் 

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article