25 படங்களை நிறைவு செய்த சத்யா

3 years ago 806

வளர்ந்து வரும் இளம் இசை அமைப்பாளர் சி.சத்யா அரண்மணை 3ம் பாகத்தின் மூலம் தனது 25வது படத்தை நிறைவு செய்துள்ளார். 2008ம் ஆண்டு ஏன் இப்படி மயக்கினாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் வெளிவரவில்லை. அதன்பிறகு அவர் இசை அமைத்த எங்கேயும் எப்போதும் படம் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. அந்த படத்தில் இடம்பெற்ற மாசமா... மாசமா..., உன் பேரே தெரியாது..., சொட்ட சொட்ட உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன்பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, நெடுஞ்சாலை, இவன் வேற மாதிரி, காஞ்சனா 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, பொன்மாலை பொழுது, ஒத்த செருப்பு, விநோதய சித்தம் உள்பட 25 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

தற்போது ஜெட்லி, ஜாஸ்மின், டீல், அலேகா, ஆயிரம் ஜென்டங்கள், ராங்கி படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். அடிப்படையில் பாடகரான சத்யா எங்கேயும் எப்போதும் படத்தில் இடம்பெற்ற மாசமா மாசமா பாடல் உள்பட ஏராளமான பாடல்களையும் பாடி உள்ளர். 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

Read Entire Article