12 ராசிகளுக்கான வாரபலனும் பரிகாரமும்

3 years ago 819

வெள்ளி முதல் வியாழன் வரை ( 15.10.2021 - 21.10.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்

சந்திரன், செவ்வாய் சாதக நிலையில் உள்ளனர். குரு வழிபாடு நலம் அளிக்கும்.

அசுவினி: குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். மனதில் நிம்மதி இருக்கும். பணியில் இருந்த பிரச்னைகளில் ஒன்று தீரும். வாரக் கடைசியில் நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

பரணி: நிதி சம்பந்தமான தடைகள் அகலும். தாமதங்கள் இனி இருக்காது. பயணம் செல்ல உற்சாகமாகத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிப்பீர்கள்.

கார்த்திகை 1ம் பாதம்: சிலருக்கு குடும்ப விஷயமாக சந்தோஷ அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே இணக்கம் அதிகரிக்கும்.

ரிஷபம்

latest tamil news

புதன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் உண்டு. அனுமன் வழிபாடு நலம் வளர்க்கும்.

கார்த்திகை 2,3,4: உங்கள் மகன்/மகளின் திறமை பளிச்சிடும். உங்களுக்கு வீட்டிலும், வெளியிலும், அலுவலகத்திலும் மதிப்பு கூடும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

ரோகிணி: குடும்பத்தினருடன் குலதெய்வ வழிபாடு, கோயில் தரிசனம் செய்வீர்கள். மற்றவர்களை மகிழ்வித்து தானும் மகிழ்வீர்கள். சகோதரர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

மிருகசீரிடம் 1,2: குடும்ப ஒற்றுமையால் நன்மை ஏற்படும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட மறைமுகத்தொல்லை நீங்கும். மனதில் நிம்மதி ஏற்படும். மகன்/மகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம் ஒன்று நடக்கும்.

மிதுனம்

ராகு, கேது, புதன் நன்மை வழங்குவர். சனீஸ்வரர் வழிபாடு நிம்மதி தரும்.

மிருகசீரிடம் 3,4: புதிதாக வேலை தேடுபவர் களுக்கு விருப்பம் தாமதமாக நிறைவேறும். நண்பர்களால் உதவி உண்டு. வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கு சாதகமான சூழல் நிலவும்.

திருவாதிரை: பணியாளர்களுக்கு செல்வாக்கு உயரும். சிலருக்கு பரிசு, பாராட்டு கிடைக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

புனர்பூசம் 1,2,3: அதிரடி மாற்றம் எதுவும் தற்போதைக்கு வேண்டாம். சில நண்பர்களின் தியாகம் நெகிழ வைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடப்பீர்கள். வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 15.10.2021 காலை 6:00 மணி - நள்ளிரவு 12:40 மணி

கடகம்

குரு, செவ்வாய், ராகு அபரிமித நற்பலன் தருவர். சிவன் வழிபாடு துன்பம் போக்கும்.

புனர்பூசம் 4: குழந்தைகளின் உடல்நிலையில் அக்கறை கொள்வீர்கள். அதிர்ஷ்டவசமாக துன்பத்தில் இருந்து தப்புவீர்கள்.

பூசம்: இதுவரை இருந்த போட்டி பொறாமை, மறைமுக எதிர்ப்பு விலகும். மனதில் நிம்மதி ஏற்படும். பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் பெறுவர்.

ஆயில்யம்: எதிர்பாராத பதவிஉயர்வு கிடைக்கும். ஆனால் எதிர்பார்த்த சம்பள உயர்வு வராமல் சற்றுக் குறைவாகவே வரும். யார் மீதும் வெறுப்பு காட்ட வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 15.10.2021 நள்ளிரவு 12:41 மணி - 18.10.2021 காலை 6:45 மணி

சிம்மம்

latest tamil news

சனி, புதன், சூரியன் அதிர்ஷ்டமான பலன்களை தருவர். தட்சிணாமூர்த்தி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

மகம்: பெண்கள் கணவரின் மனம் கவரும் படி நடந்து கொள்வீர்கள். தாயின் ஆரோக்கியம் பற்றிய கவலைகள் குறைந்திருக்கும்.

பூரம்: கவலைகளைத் துாக்கிப் போட்டுவிட்டுப் பொறுப்பாக வேலையைக் கவனித்தால் நல்லது. உங்களுக்கு வேண்டியவர் சொன்ன அறிவுரையை ஏற்று நிம்மதியடைவீர்கள்.

உத்திரம் 1: வெளிநாட்டில் பணிபுரிய விரும்பு பவர்களின் எண்ணம் மெல்ல நிறைவேறும். பங்குச் சந்தையில் பெரிய முதலீடு செய்வது பற்றி இப்போது எண்ண வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 18.10.2021 காலை 6:46 மணி - 20.10.2021 மதியம் 3:22 மணி

கன்னி

குரு, ராகு புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். நரசிம்மர் வழிபாடு நன்மை அளிக்கும்.

உத்திரம் 2,3,4: பல காலம் காத்திருந்த நற்செய்தி ஒன்று வரும். சமீபத்தில் திருமண மானவர்களுக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படும்.

அஸ்தம்: உங்களின் அவசரப்போக்கால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும். செலவுக்கேற்ற வருமானம் வரும். வீண்செலவுகளை முனைந்து தவிர்த்து விடுவீர்கள். சேமிப்பு கூடும்.

சித்திரை 1,2: சிலருக்கு வாகனம் வாங்க வாய்ப்புண்டாகும். கணவன், மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் மனதில் அமைதி நிலவும்.

சந்திராஷ்டமம்: 20.10.2021 மதியம் 3:23 மணி - 21.10.2021 நாள் முழுவதும்

துலாம்

குரு, புதன், சந்திரன் அருமையான நற்பலன்களை தருவர். ராமர் வழிபாடு சுபிட்சம் அளிக்கும்.

சித்திரை 3,4: குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னை சுமுகமாக தீரும்.

சுவாதி: சிலரின் சந்திப்பு காரணமாகப் பழைய வருத்தம் ஒன்று நீங்கி நிம்மதி வரும். குடும்பத்தில் எதிர்ப்புகள் மாறி ஒற்றுமை விளங்கும். கணவர் மனைவி வழி உறவினர்கள் பாச மழை பொழிவார்கள்.

விசாகம் 1,2,3: கணவன் மனைவி இடையே இருந்த சண்டைகள் முற்றிலும் தீரும். வெளிநாட்டிலோ, வெளியூரிலோ உள்ள குழந்தைகளின் வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்

சூரியன், செவ்வாய், புதன் நற்பலனைத் தருவர். அம்மன் வழிபாடு சிரமம் நீக்கும்.

விசாகம் 4: தொழில் செய்பவர்கள், தங்கள் துறைகளில் வளர்ச்சி காண்பார்கள். குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றி மறையலாம். சுபநிகழ்ச்சிகள் பெரியோர்களின் தலையீட்டால் நல்லவிதமாக முடியும்.

அனுஷம்: வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். திட்டமிட்ட விஷயங்களை முடிக்க தடைகள் ஏற்பட்டாலும் நல்லபடியாகச் செய்து முடிப்பீர்கள்.

கேட்டை: மனம் நிறைவான சம்பவங்கள் நிகழும். நிறைவேறுமோ நிறைவேறாேதா என்று பயந்த விஷயம் ஒன்று நல்லபடியாக முடியும். மற்றவர்களுக்காக செய்த முயற்சிகள் நிறைவேறி புகழைத் தரும்.

தனுசு

குரு, ராகு, கேது தாராள நற்பலன்களை வழங்குவர். அனுமன் வழிபாடு நிம்மதி அளிக்கும்.

மூலம்: செய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும். கவுரவமான பதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் இடமாற்றம் கிடைத்து குடும்பத்தோடு சேர்வர்.

பூராடம்: அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ், கவுரவம் தேடி வரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுக்கும் பஞ்சம் ஏற்படாது.

உத்திராடம் 1: மனதில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சி பற்றிய முயற்சிகள் நல்லபடியாக முடியும். மேலதிகாரியின் ஆதரவைப் பெற முயற்சி மேற்கொள்ள பலன் உண்டு.

மகரம்

சுக்கிரன், சந்திரனால் நன்மை கிடைக்கும். திருமால் வழிபாடு வளம் தரும்.

உத்திராடம் 2,3,4: வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திருவோணம்: முன்னேற்றம் பற்றிய சிந்தனை மனதில் உதயமாகும். இது பிற்கால நன்மைக்கு வழிவகுக்கும். புதிய முயற்சிகள் லாபம் தருவதாக அமையும். பெண்களுக்கு மிகச் சிறந்த வாரம்.

அவிட்டம் 1,2: பதவி உயர்வைப் பெறுவதற் கான வாய்ப்பு உருவாகும். சக ஊழியர்களால் ஏற்பட்ட மனக்குழப்பம் விலகும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றமான பாதைக்கு திரும்புவார்கள்.

கும்பம்

புதன், சூரியன், செவ்வாயால் அளப்பரிய நன்மை கிடைக்கும். திருமகள் வழிபாடு சுபிட்சம் தரும்.

அவிட்டம் 3,4: தொழில்/பணியில் மேன்மை உருவாகும். தடைபட்ட திருமணம், தொழில் போன்றவை நல்லவிதமாக முடியும். பணியாளர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருப்பது நல்லது.

சதயம்: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தொழில் செய்பவர்கள் தங்கள் துறையில் லாபம் ஈட்ட பாடுபட வேண்டியிருக்கும்.

பூரட்டாதி 1,2,3: தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இடமாற்றம் சம்பந்தமாக செய்யும் முயற்சி வெற்றி பெறும். பணியில் இருந்த பிரச்னைகள் நீங்கி நிம்மதிகிடைக்கும்.

மீனம்

குரு, புதன், சனி அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். சூரிய வழிபாடு வினை தீர்க்கும்.

பூரட்டாதி 4: ஜீரண சம்பந்தமான பிரச்னை இருக்கக் கூடும். வாகனம் வாங்கும் முயற்சி தள்ளிப் போகலாம். பயணத்தின் போது பொருட்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.

உத்திரட்டாதி: குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பீர்கள். மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புண்டு. முயற்சிகள் வெற்றி பெறும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

ரேவதி: உறவினர் வகையில் திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். தந்தை வழி உறவினர் மூலம் நன்மை காண்பீர்கள். பெரியோர், பெற்றோரின் ஆலோசனை கிடைக்கும்.

Read Entire Article